கைகலப்பில் அரசாங்க ஊழியர் மரணம்

இரு ஆடவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பில் ஒருவர் மரணமுற்றார். மரணமுற்றவர் அரசாங்க ஊழியர் என்று அடையாளம் கூறப்பட்டது.

இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் மச்சாங், சுங்கை ஹாலா கிளை கிராமம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் பட்டறை ஒன்றின் முன் நிகழ்ந்தது.

ஏதோ ஒன்றை விவாதிப்பதற்காக காரில் வந்திறங்கிய நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அரசாங்க ஊழியர்,பின்னர் அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் சண்டையாக மாறியதாக கூறப்படுகிறது.

இதில் முகத்தில் குத்துக் காயங்களுக்கு ஆளான அரசு ஊழியர், மருத்துவமனைக்க் கொண்டு செல்லும் வழியில் மரணமுற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் மோட்டார் சைக்கிள் பட்டறை பணியாளரான 28 வயது ஜாஹித் ஹஸ்ரான் என்பவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS