தனது சகோதரி மற்றும் அவரின் கணவரால் கடந்த 3 மாத காலமாக கடும் சித்ரவதைக்கு ஆளாகி, இரண வேதனையில் சொல்லொன்னா துயரத்திற்கு இலக்காகியதாகக் கூறப்படும் 18 இந்தியப் பெண் காப்பாற்றப்பட்டது தொடர்பில் அந்த சிறுமியின் மாமன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்தச் சிறுமியின் சகோதரியைப் போலிசார் நேற்று செப்டம்பர் 3 ஆம் தேதி ஜாமினில் விடுவித்த போதிலும் இச்சம்பவத்திற்குப் பின்னணியில் சூத்திரதாரியாக இருந்த அவரின் கணவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என அரசு சாரா இயக்கப் பொறுப்பாளர் என்.ஜே நாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜொகூர், சிகாமாட் பத்து அன்னாம், தம்பாங் தோட்டத்தில் தமது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அந்தப் பெண், நாக்கு, முகம், காது மற்றும் உடலின் பிற பாகங்களில் பழுக்கக் காய்த்த கரண்டியினால் சூடு வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாக போலிஸ் புகார் செய்யப்பட்டு வந்துள்ளது.
தமது சகோதரி மற்றும் மாமனின் சித்ரவதை தாங்க முடியாமல் தோட்ட மக்களின் உதவியுடன் அந்த இரணா வேதனையில் அப்பெண் உயிர் தப்பியதாக அவரே நேரடியாக சாட்சியம் அளித்துள்ளார்.
அந்தச் சித்ரவதையில் இருந்து மீட்க்கப்பட்ட அப்பெண் சிகாமாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே வேளையில், அவரின் சகோதரி மற்றும் மாமனுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சிகாமாட் பத்து அன்னாம் போலிஸ் சிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அப்பெண்ணின் சகோதரியை கைது செய்த போலிசார் இந்த சித்ரவதைக்குக் காரணாமான அவரின் கணவரை கைது செய்யாமல் இருப்பது குறித்து என் ஜே நாதன் வினவியுள்ளார்.