துணைப் பிரதமர் அகமாட் ஸாஹிட் விடுவிப்பு நீதிமன்ற முடிவை மதிக்கிறோம்

தமக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் 47 குற்றச் சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படாமல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற முடிவை அரசாங்கம் மதிக்கிறது என்று 2வது துணைப் பிரதமர் டத்தூஸ்ரீ ஃபதில்லா யூசோஃப் தெர்வித்துள்ளார்.

நீதிமன்ற முடிவில் அரசாங்கம் தலையிடாது. நீதிமன்றம், நீதிபரிபாலனம் மற்றும் அரசு நிர்வாகம் ஆகியவை தனித்தனியாக செயல்படுவதால் துணைப் பிரதமர் வழக்கில் நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே, அந்த முடிவை அரசாங்கம் மதிக்கிறது என்று ஃபதில்லா யூசோப் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் சட்டத்துறை அலுவலகம் மேற்கொள்ள இருக்கும் அடுத்தக்கட்ட நகர்வு, அவர்களைப் பொறுத்த விஷயமாகும் என்று ஃபதில்லா யூசோப் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS