பிரபல பத்திரிக்கையாளரும், ஸ்டார் ஆங்கில நாளேட்டின் முன்னாள் நிர்வாக ஆசிரியருமான வாங் சுன் வாய், தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெர்னாமாவின் தலைவராக சேவையாற்றி வந்த செனட்டர் டத்தோ ரயிஸ் அடிபா ராட்சி – க்கு அடுத்து பெர்னாமாவின் புதிய தலைவராக வாங் சுன் வாய்நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங் சுன் வாய் -யின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
வாங் சுன் வாய் நியமனம் செப்டம்பர் முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் வேளையில் அவரின் நியமன கடிதத்தை தகவல், இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் இன்று வழங்கினார்.