கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிள்ளான், தாமான் செந்தோசாவில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் இரண்டு ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றன.
31 வயது புவனேஸ்வரன் முனியாண்டி மற்றும் 38 வயது சுரேஷ் ஆரசாமி ஆகியோர் தற்போது தேடப்பட்டு வரவதாக கிள்ளான் செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்துள்ளார்.
கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெவ்வேறு இடங்களில் இதுவரையில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். 24 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் செய்யப்பட்டு இருப்பதாக ஏசிபி சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டுள்ளார்.
தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு கடையில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவத்தில் இக்கும்பல் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை நிற பெருடுவா மைகவீ ரக காரில் சென்ற இக் கும்பல் வீடொன்றில் கொள்ளையடிக்க முற்பட்ட வேளையில் அங்கிருந்த வங்காளதேசத் தொழிலாளரை தக்கி காயம் விளைவித்தாக ஏசிபி சா ஹூங் ஃபாங்மேலும் கூறினார்.
பின்னர் ஆயிரம் வெள்ளி ரொக்கத்துடன் இக்கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து குற்றவியல் சட்டம் 394 பிரிவின் கீழ் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.