ஆசிரியர் ஒருவர் பயணித்த வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலையே மரணமுற்றார்.
இச்சம்பவம் நேற்று மதியம் 12:45 மணியளவில் ரவாங் – செரண்டா சாலையின் 7.5 -ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங் தேசியப் பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்து வந்த 39 வயதுடைய அந்த ஆசிரியர், செலாயாங் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரீம் தெரிவித்தார்.
மருத்துவமனையில் டையளசியஸ் சிகிச்சையை முடித்துக் கொண்டு அந்த ஆசிரியர் காரில் புறப்பட்ட போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக அஹ்மத் பைசல் குறிப்பிட்டார்.