பயன்படுத்தப்பட்ட பாடப் புத்தகங்களை பெற விரும்பிய டியூஷன் ஆசிரியை ஒருவர், போலி முதலீட்டுத் திட்டத்தில் 2 லட்சம் வெள்ளியை பறிகொடுத்ததாக போலீசில் புகார் செய்துள்ளார்.
பத்து பஹாட்டைச் சேர்ந்த 48 வயதுடைய அந்த ஆசிரியை கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முகநூல் வாயிலாக அறிமுகமான ஆடவரிடம் பயன்படுத்தப்பட்ட நூல்களை குறைந்த விலையில் வாங்கும் திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் தம்மிடம் பணப் பெற்ற நபர், ஆசை வார்த்தைகளை கூறி, தம்மை மோசம் செய்து விட்டதாக உணர்ந்தப் பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்து இருப்பதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.