லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வரும் சனிக்கிழமை நடத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் திட்டமிட்டுள்ள ஆட்சேப பேரணி, புக்கிட் பிந்தாங்கிற்கு இடம் மாற்றப்படும் என்று இன்று கோடிக் காட்டப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், சோகோ பேரங்காடி மையத்தின் முன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட இந்த பேரணி புக்கிட் பிந்தாங்கிற்கு மாற்றப்படும் சாத்தியம் இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனலின் இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபதில் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சேப பேரணி எவ்வித தடங்களின்றி சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு நாளை புதன்க்கிழமை போலீஸ்துறையை தாங்கள் சந்திக்க விருப்பதாக அஹ்மத் ஃபதில் குறிப்பிட்டார்.