மலேசியர்கள் குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் எல்லா நேரங்களிலும் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரப்புடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் அதிகாரத்தை கொண்டிருக்கும் போதும், பதவியில் அமர்ந்திருக்கும் பட்சத்திலும் நாட்டின் வெற்றிக்கு அடித்தளமாகும் என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் நினைவில் கொள்ள வேண்டும் என்று சுல்தான் கேட்டுக் கொண்டார்.
அரசியல் தலைவர்கள் இரு வெவ்வேறு துருவங்களாக இருந்து கொண்டு இனம், மதம், ஆகியவற்றின் பெயரால் மக்களைத் தூண்டுவதில் முனைப்பாக இருப்பார்களேயானால் நாடு எல்லா நிலைகளிலும் பின் தள்ளப்படும் என்று சுல்தான் எச்சரித்தார்.