மலேசியாவில் முதல் நிலை கோடீஸ்வரர், உலகில் 112 ஆவது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்துக்கு சொந்தக்காரரான நாட்டின் முன்னணி சக்கரை ஆலை மன்னன் ரோபெர்ட் குவோக் தமது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
மனித வாழ்வில் 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவது மிக அபூர்வமானதாகும். ஆனால், முதல் நிலை கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தில் ஒருவர் 100 ஆவது பிறந்த நாளை விழாவை கொண்டாடுவது என்பது பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை.
அந்த வகையில் 1,511 கோடி டாலர் அல்லது 7,123 கோடி வெள்ளி சொத்துக்களுக்கு சொந்தக்காரராக பெரும் சொந்தக்காரராக ரோபெர்ட் குவோக் விளங்குகிறார்.
இரண்டாவது உலகப் போருக்கு பிறகு புதியதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் வர்த்தக செல்வந்தர்களை கட்டியெழுப்பிய ஆசிய தொழில் முனைவர்களின் பிரத்தியே குழுவில் ரோபெர்ட் குவோக் தற்போது உயர்ந்து நிற்கிறார்.