நெகிரி செம்பிலான் மாநில மஇகா தலைவர் டத்தோ எல். மாணிக்கம், இன்று கட்சியிலிருந்து விலகினார். ஜெராம் பாடாங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான எல். மாணிக்கம் மஇகாவில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தம்முடைய இந்த விலகல் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும், மஇகாவில் இருந்து விலகுவதற்கான காரணத்தை கட்சியின் தலைமையிடம் விளக்கி விட்டதாக எல். மாணிக்கம் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.