மலேசிய இந்தியர்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திராத ஒரு சுதந்திரமான அரசியல் கட்சி தேவைப்படுகிறது என்று பினாங்கு மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
இப்படியொரு சுதந்திரமான அரசியல் கட்சியை உருவாக்குவது மூலமே இந்தியர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய இலக்கை நோக்கி பீடு நடைப் போட முடியும் என்று டாக்டர் இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நாட்டில் உள்ள இந்திய சமூகம் தேசிய நீரோட்டத்திலிருந்து பின்தள்ளப்பட்டு விட்டனர். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து உரிய வாய்ப்புகளை பெற வேண்டுமானால் ஒருசுதந்திரமான அரசியல் கட்சி அவர்களுக்கு தேவை என்று டாக்டர் இராமசாமி வலியுறுத்தினார்.