குற்றச்சாட்டை மறுத்தது பெர்னாஸ்

தங்களின் அரிசி விநியோகத்தில் பிளாஸ்டிக் அரிசி இருப்பதாக சமூக வளைத்தலங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் குற்றச்சாட்டை நாட்டின் முன்னணி அரிசி விநியோக ஏஜென்சியான பெர்னாஸ் எனப்படும் நேஷ்னல் பெர்ஹாட் மறுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் பெறப்படும் அரிசியை உள்ளடக்கிய அரிசி விநியோக சங்கிலித் தொடர்பில் ஒவ்வொரு கட்டத்திலும் உயர் தரநிலைகள் மற்றும் கடுமையான தரக் கண்காணிப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிபாட்டை தங்கள் நிறுவனம் பேணி வருவதாக பெர்னாஸ் விளக்கம் அளித்துள்ளது
அரிசி விநியோகத்தில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படை இல்லை என்பதையும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS