கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின

இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக, கோலாலம்பூரில் பல்வேறு சாலைகளில் நீர் மட்டம் உயர்ந்து கரைபுரண்டோடியதால் வாகனமோட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பன்டார் துன் ராசாக், செச்ராஸ், ஜாலான் புடு, ஜாலான் சங்காட் தம்பி, பன்டார் ஶ்ரீ பெர்மைசூரி போன்ற பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு நிலைமைய மோசமாக்கின. கோலாலம்பூர் மாநகரில் பிரதான பேருந்து சேவையை வழங்கி வரும் ரேபிட் கேஎல், பல சாலைகளில் தங்கள் நிறுவனத்தின் பேருந்து கடக்க முடியாமல் போக்குவரத்து நிலைக்குத்தியதாக தெரிவித்தது. இதில் ஜாலான் சான் சௌ லின் னும் அடங்கும்.
பேருந்துகள் சுங்ஙை பெசிலிருந்து ஜாலான் யு விற்கு வழித்தடம் மாற்றப்பட்டதாக அந்த அந்த நிறுவனம் தெரிவித்தது.

WATCH OUR LATEST NEWS