மலாக்கா, பந்தாய் மலாக்கா கடற்கரையோரத்தில் மனித மண்டை ஓடும்,எலும்புகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை என்கோர் கட்டட வளாகத்திற்கு அருகில் மலாக்கா கடற்பகுதியில் நில மீட்புத்திட்டம் அருகில் இந்த மண்டை ஓடும், எலும்புகளும் மீட்கப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி க்ரிஸ்தோபர் பதிட் தெரிவித்தார்.
மாலை 6.30 மணியளவில் ஓர் அவசர அழைப்பின் வாயிலாக மனித எலும்புக்கூடும் கிடப்பதாக தாங்கள் தகவல் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். ஒரு புதர் பகுதியில் மணல் திட்டில் அந்த எலும்புக்கூடுகள் கிடப்பதை போலீசார் கண்டதாக அவர் மேலும் கூறினார். அதற்கு முன்னதாக அந்த மண்டை ஓடு தொடர்பாக ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.