விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது

போலீஸ் நிலையம் ஒன்றில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைதி ஒருவரை போலீஸ்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதைப் போன்ற காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை அறிக்கை ஒன்றை திறந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ்காரர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

கிள்ளானில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் இத்தாக்குலில் தொடர்புடைய போலீஸ்காரர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாக டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS