கார் ஒன்றில் பெண்ணை கண்மூடித்தனமாக அறையும் ஆடவர் ஒருவரின் மூர்க்கத்தனமான செயல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் நூர் அரிபின் நசீர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் கோம்பாக்கில் நேற்று மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்று போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தனது காதலி என்று நம்பப்படும் பெண்ணை, அவரின் 22 வயதுடைய முன்னாள் காதலன் கண்மூடித்தனமாக அறையும் காட்சி, அந்த காணொளியில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பாக அந்தப் பெண், போலீசில் புகார் செய்து இருப்பதையும் நூர் அரிபின் சுட்டிக்காட்டினார்.