சாமானியர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள 600 வெள்ளி உதவித் தொகை எந்த வகையிலும் போதாது என்று மூவார் எம்.பி.யும், மூடா கட்சித் தலைவருமான சைட் சாடிக் அப்துல் ரஹ்மான்தெரிவித்துள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்த 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மடானி பட்ஜெட் அல்ல. மலாய் மொழியில் விலைவாசி உயர்வை சித்தரிக்கும் மஹால் பட்ஜெட்டாகும் என்று சையிட் சாடிக் வர்ணித்துள்ளார்.
தற்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இந்த 600 வெள்ளி உதவித் தொகை போதுமானதாக இருக்காது என்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டக்கான பட்ஜெட் மீதான வாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சையிட் சாடிக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.