கிள்ளான் – கோலாலம்பூர் கூட்டரசு நெடுஞ்சாலையின் 7 ஆவது கிலோமீட்டரில் இன்று காலை 8 மணியளவில் நிகழ்ந்த விபத்தொன்றில் கார் ஒன்றின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார்.
யமஹா ஒய் 15 ரக மோட்டார் சைக்கிளும் மெர்சிடிஸ் பென்ஸ் காரும் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் காரின் அடியில் சிக்கிய ஆடவரை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படை உதவி நாடப்பட்டதாக அதன் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
எந்தவொரு அடையாள ஆவணத்தை கொண்டு இருக்காத 30 வயது மதிக்கத்தக்க அந்த மோட்டார் சைக்கியோட்டியின் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் அந்த நபர், ஷா ஆலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.