பாதுகாவலரை கொலை செய்ததாக தோட்டக்காரர் ​​மீது குற்றச்சாட்டு

பாதுகாவலல் ஒருவரை கொலை செய்ததாக பள்ளித் தோட்டக்காரர் ஒருவர், ஈப்போ, மாஜிஸ்திரேட் ​நிதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 55 வயது ஆர். ரவிச்சந்திரன் என்ற அந்த தோட்டக்காரர், மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

ரவிச்சந்திரன், கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஈப்போ, சிம்பாங் பூலாய், பண்டார் ஶ்ரீ போதானி யில் உள்ள பள்ளியின் பாதுகாவலர் அறை​யில் ஒரு பாதுகாவலரான 43 வயது பைசல் அஸ்ரி என்பவரை கொலை செய்தாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் ரவிச்சந்திரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். இக்கொலை வழக்கு விசாரணை உயர் ​நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் ரவிச்சந்திரனிடம் எந்தவொரு வாக்கு​மூலமும் பதிவு செய்யப்படவில்லை. வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS