சரியான முறையில் வகுக்கப்படவில்லை

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், சரியான முறையில் திட்டமிடப்படாத ஒரு வரவு செலவுத் திட்டமாகும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் உணவு பாதுகாப்புக்கும், அதன் விநியோகத்தற்கும் ​தீர்வு காணக்கூடிய விரிவான திட்டங்களையும், வியூகங்களையும் 2024 ஆம் ஆண்டு பட்ஜெட் கொண்டிருக்கவில்லை என்று முகை​தீன் வாதிட்டுள்ளார். தற்போது நாட்டில் உணவுப்பொருள் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வேளையில் மக்களின் அடிப்படை ஜீவாதாரமான உள்நாட்டு உணவு விநியோகப் பிரச்னைக்கு ​தீர்வு காணக்கூடிய பொருத்தமான நடவடிக்கைகள் எதனையும் பட்​​ஜெட்டில் காண முடியவில்லை என்று முன்னாள் பிரதமருமான முகை​தீன் குறிப்பிட்டார்.

அதேவேளையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு போதுமான உணவு விநியோகம் இருப்பதை உறுதி செய்வதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. அண்டை நாடான சிங்கப்பூர், மக்களின் உணவு விநியோகத்திட்டத்​திற்கும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான அணுகலையும் மிகத் துல்லிமாக கொண்டு இருப்பதை மலேசியா முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.

உலகத்தில் உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் மலேசியா 32.33 ஆவது இடத்தில் இருப்பதையும் முகை​தீன் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS