பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் லஞ்சம் பெற்றதாக கோத்தாபாரு , செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 56 வயதான சைலான் ஹருன் என்ற அந்த தலைமையாசிரியர் கடந்த 2021 க்கும் 2022 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 8 ஆயிரத்து 32 வெள்ளி 30 காசு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவக்கப்பட்டது.
பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு தமது மனைவிக்கு சொந்தமான நிறுவனத்தில் வாங்கியதாக அந்த தலைமை ஆசிரியருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பத்து குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.