இரண்டாம் படிவ மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் பதின்ம வயதுடைய 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம், பேரா, பகான் டத்தோவில் ஒரு வீட்டில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் அந்த மாணவின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளதாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.
இதன் தொடர்பில் 15 க்கும் 17 க்கும் இடைப்பட்ட வயதுடைய 6 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்கு ஏதுவாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.