அரசு நிறுவனங்களில் குறிப்பாக அரசாங்க சார்பு நிறுவனங்களான ஜி.எல்.சி யில் பெண்களின் பங்கேற்பு 60 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பெண்களின் பங்கேற்பு 88 விழுக்காடு வரை எட்டிப்பிடிக்கப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
எனினும் தனியார் துறையில் இந்த எண்ணிக்கை இன்னும் 60 விழுக்காட்டை எட்ட வில்லை. அந்த இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காக அமைச்சு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் என்ற அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.