கருணாநிதி குடும்பத்தின் விண்ணப்பம் நிராகரிப்பு

கடந்த 2013 ஆம் ஆண்டு போலீஸ் தடுப்புக்காவலில் மரணம் அடைந்த சிரம்பானைச் சேர்ந்த பி. கருணாநிதியின் இறப்பு தொடர்பில் மலேசிய அரசாங்கம் மற்றும் போலீஸ் துறைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நிராகரித்து இருக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி கருணாநிதியின் குடும்பத்தினர் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று தள்ளுடி செய்தது.

இந்த மேல்முறையீட்டில் புதிய விவகாரம் எதுவும் இல்லை. முந்தைய வழக்கில் கூறப்பட்ட விவகாரத்தையே கருணாநிதியின் குடும்பத்தினர் மீண்டும் எழுப்பியிருகின்றனர்.

அவர்களின் விண்ணப்பத்தில் தகுதிபாடுயில்லை என்று கூறி, வழக்கு மனுவை தள்ளுபடி செய்வதாக அப்பீல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளான டத்தோ எஸ். நந்தபாலன், டத்தோ முகமட் நஸ்லான் முகமட் கசாலி மற்றும் டத்தோ டாக்டர் சூ கா சிங் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS