ஒரு லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் எடை கொண்ட பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அந்த அரிசியின் விலையை நிர்ணயிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று விவசாயம் மற்றம் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
இந்தியா அறிவித்துள்ள அரிசியை கொள்முதல் செய்வதற்கு முன்னதாக அது தொடர்பாக சில விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராய வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முகமட் சாபு விளக்கினார்.