ஜோகூர் மாநில இளவரசர் துன்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் வழி நடத்தி வரும் ஜேடிதி காற்பந்து அணி தென் கொரிய நாட்டில் புகழ் பெற்று வருகிறது.
ஜோகூர் இளவரசர் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் அந்த அணியின் எழுச்சியைக் குறித்து தென் கொரிய ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டு வந்த நிலையில், அந்த நாட்டில் ஜேடிதி யின் புகழ் ஓங்கியுள்ளது.
மிகக் குறிப்பாக, கடந்த 2022, 2023 ஆண்டுகளுக்காக ஆசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில் கொரிய நாட்டின் வலுவான அணியான உல்சான் ஹியூன்டாய் யை 3 முறை ஜேடிதி வீழ்த்திய பின்னர் தென் கொரிய காற்பந்து ஆர்வலர்களிடையே ஜோகூர் அணி புகழ் பெறத் தொடங்கி உள்ளது.