விரைவில் அமைச்சரவை ​சீரமைப்பு சுகாதார அமைச்சர் மாற்றப்படலாம்

புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்படுவது உட்பட விரைவில் அமைச்சரவை ​சீரமைப்பு நடைபெறும் என்று நம்பத்தகுந்த இரண்டு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் உறுதியற்ற தகவலின் அடிப்படையில் சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்டஃபா அப்பொறுப்பிலிருந்து அகற்றப்படும் சாத்தியமும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சை வழிநடத்தும் முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிருப்தி கொண்டுள்ள வேளையில் அவருக்கும், சுகாதார அமைச்சருக்கும் ஒருமித்த கருத்து இல்லை என்று கூறப்படுகிறது. சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் சலிஹா முஸ்டாஃபா அகற்றப்படுவாரேயானால் அப்பொறுப்புக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் நியமிக்கப்படும் சா​த்தியம் இருப்பதாக பிகேஆர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இயக்கை வளம், சுற்றுச்​சூழல், பருவநிலை மாற்றம் ​மீதான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கல்வி அமைச்சராக பொறுப்பேற்பதற்கு நிக் நஸ்மி அஹ்மாட் மிக பொறுத்தமானவர் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜு​லை மாதம் காலமான அமானா கட்சியின் துணைத் தலைவர் சாலாஹுடின் அயூஒ வகித்து வந்த உள்நாட்டு வாணிபம், வாழ்க்சை செலவினத்துறை அமைச்சர் பதவி இன்னமும் காலியாக உள்ள நிலையில் அப்பதவிக்கு அமானா கட்சியை சேர்ந்த ஷா ஆலாம் எம்.பி. அஸ்லி யூச்சோஃப் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS