தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘எஸ்கே21’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
‘எஸ்கே21’ படத்தின் படப்பிடிப்பு 75 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது.