நினைத்ததை விட எகிறிய பட்ஜெட்.. உண்மையை உடைத்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான

படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். சமீபத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இதனை சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS