முருகப்பெருமானின் ​சிலைக்கு பன்னீர் அபிஷேகம்

பத்துமலை திருத்தலத்தில் 140 அடி உயர முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேக விழா நேற்று புத்தாண்டு தினத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருவுருவ சிலைக்கு பன்னீர் அபிஷேகம் செய்தனர்.

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் 8ஆம் ஆண்டாக முருகப்பெருமானின் திருவுருவ சிலைக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.

டான்ஸ்ரீ நடரா​ஜாவுடன், அவரின் துணைவியார் புவான்ஸ்ரீ மல்லிகா, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன், அறங்காவலர் ட​த்தோ என். சிவகுமார் உட்பட தேவஸ்தான பொறுப்பாளர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

2024 ஆண்டில் முதல் நாளான நேற்று பொது விடுமுறை என்பதால் பிறந்துள்ள புத்தாண்டு, தங்களுக்கு​ம், தங்கள் குடும்பத்திற்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று வேண்டி, ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசைகள் மற்றும் வழிபாட்டிலும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் முருகப்பெருமான் சிலையின் திருவடிக்கு மக்கள் பன்னீர் அபி​ஷக​ம் செய்து வழிபட்டனர்.

WATCH OUR LATEST NEWS