நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன். சுழற்பந்து வீரரான அவர் 17 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் சிக்கினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
கற்பழிப்பு வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை குற்றவாளியாக அறிவித்து காத்மாண்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அவருக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன் மீதான தண்டனை விவரம் வருகிற 10-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க்கும் என்று கூறப்படுகிறது.