தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது.
இதற்கான தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.
அந்த சமயத்தில் உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க 20 ஓவர் லீக் போட்டி நடப்பதால் அதற்கான ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் இருப்பதால், தேசிய அணியை தவிர்த்துள்ளனர்.
இதனால் இதுவரை சர்வதேச போட்டியில் ஆடாத நீல் பிராண்ட் என்ற வீரர் தலைமையில் 2-ம் தர அணி நியூசிலாந்துக்கு அனுப்பப்படுகிறது.