முக்கிய சாட்சியமொன்று இல்லாததால் இன்றுவரை மறுமமாகவே இருக்கும் அன்னப்பூரணி ஜென்கின்ஸ் மரண சம்பவம். இதற்குபின் என்னவாக இருக்கும்?
அன்னப்பூரணி, வயது 65, கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி பினாங்கிற்கு தம் கணவர் ஜேம்ஸ் ஜென்கின்ஸ் உடன் ஒரு சுற்றுலா பயணம் மேற்கொண்டு உயிரிழந்த சம்பவம் இன்றுவரை மறுமமாகவே இருந்து வருகிறது. மலேசியாவில் பிறந்த அன்னாஸ் என்கிற அன்னப்பூரணி தம் பிரான்ஸ் கணவரை மணமுடித்து ஆஸ்திரேலியாவின் பிரஜையானார்.
சுமார் 2 வார சுற்றுலா பயணத்தில் சந்தோஷம் மட்டுமே நிலைத்திருக்கும் என்று நினைத்து தம் கணவருடன் அவர் மேற்கொண்ட பயணம் துயரில் முடிவுற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. தம் பூர்வீக ஊரான பினாங்கில் உள்ள ஹாட்டல் ஜேன் எனும் தங்கும் விடுதியில் இவ்விருவரும் தங்கியிருந்தனர்.
காதலும் மகிழ்ச்சியும் மட்டுமே இப்பயணத்தில் தொடரும் என்று எதிர்பார்த்த இவ்விருவரின் விருப்பமும் ஏமாற்றத்தில் முடிந்தது. டிசம்பர் 13 ஆம் தேதி, அன்னாஸ் தங்கும்விடுதியில் இருந்து வெளியேறி புர்மா சாலை வழியில் இருக்கும் ஒரு சிகிச்சையகத்திற்கு பல் பரிசோதனை பெற சென்றிருந்தார்.
அதன்பின், சிகிச்சையக ஊழியர் உதவியுடன் உபேர் சவாரி மேற்கொண்டு பத்து லன்சாங்கில் குடியிருக்கும் தம் தாயாரைக் காண சென்று கொண்டிருந்த போது அக்கார் ராமகிருஷ்ண ஆசிரமம் முன் நிறுத்தப்பட்டதாகவும் அக்காரில் இருந்து அன்னாஸ் இறங்கியதாகவும் அங்குதான் இறுதியாக அவரைக் கண்டதாகவும் தெரியவருகிறது.
24 மணி நேரத்திற்கு பிறகும் தம் மனைவி தங்கும்விடுதிற்கு திரும்பாததை உணர்ந்த கணவர் பிரான்ஸிஸ் ஜேம்ஸ், இதுக்குறித்து தங்கியிருந்த விடுதியிலும் காவல்துறையிலும் புகார் செய்திருந்தார். நாட்கள் வாரமாகின, வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் பின் வருடங்கள் ஆகின. அன்னாஸைப் பற்றி எந்தவொரு தகவலும் தெரியவில்லை அதற்கான முயற்சிகளும் காவல்துறையினர் எடுக்கவில்லை என்றுக்கூட சொல்லலாம்.
2020 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் தேதி ஜாலான் பத்து கந்தோங்கில் உள்ள டரிஃப் கிளப்புக்கு அருகில் ஓர் இடுப்பு எலும்பு கண்டெடுக்கப்பட்டதாகவும் மருத்துவர் பரிசோதனைக்குப் பிறகு அந்த இடுப்பு எலும்பு அன்னாஸ் உடையதாகவும் தெரியவருகிறது. அதுமட்டுமில்லாமல் பரிசோதனைக்கு பின் அன்னாஸின் இடுப்பு எலும்புகள் ஒரு நெகிழி பையில் கட்டப்பட்டு ஒரு மூலையில் வைத்திருப்பதாகவும் அவரின் மகன் மனக்குமரலுடன் இதனைத் தெரிவித்தார்.
காணமல் போய் பிணமாக கண்டெடுக்கப்பட்டவரின் எலும்புகள் இப்படியா எந்தொவொரு மனிதாபிமானம் இல்லாமல் ஒரு மூலையில் கட்டி வைத்திருப்பர்? அன்னாஸின் குடும்பத்தினர் அன்னாஸ் கொள்ளையடிக்கப்பட்டுதான் கொலைச் செய்திருக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் இதுக்குறித்து போலீசார்கள் எந்தவொரு நடவடிக்கையும் விசாரணையும் எடுக்க முன் வரவில்லை என்றும் குற்றம் சாடினர்.
மரண விசாரனை நடக்கும் காலத்தில் போதுமான சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லாத காரணத்தினால் விசாரணைக்கு ஒரு முடிவு இன்றுவரை கிடைக்காத பட்சத்தில் ஆஸ்திரேலிய சட்டமன்றத் குழுவின் உறுப்பினர் கடந்த ஆண்டு மலேசியா அரசரிடம் அன்னாஸ் மரண விசாரனைக்கு ஒரு தீர்வு விரைவில் கிடைக்க வேண்டும் என்று தீர்மானம் முன்வைத்தது.
விசாரணை அதிகாரிக்கு இந்த முக்கியமான ஆதாரத்தை உரிய விடாமுயற்சியோ அல்லது விசாரணையோ செய்யவில்லை. என்ன காரணம்? புலனாய்வு அதிகாரியும் தாம் காணாமல் போவதற்கு முன்பு தம் கணவரை தொடர்பு கொண்ட லெண்ட்லைன் எண்ணையும் விசாரிக்கவோ அல்லது அதன் உரிமையா
புலனாய்வு அதிகாரியும் லேண்ட்லைன் எண்ணை (அன்னபூரணி தனது கணவருக்கு அழைப்பு செய்ய பயன்படுத்தினார்) அல்லது அதன் உரிமையாளரை விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லையா? அன்னபூரணியை துன்பத்தின் போது தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதித்த ஒரு நல்ல சமாரியன்?