அம்மாவின் கைப்பக்குவத்தில் உருவான நிஷாஸ் தொக்கு மக்களிடையே தொடர்ந்து சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. நிஷாஸ் தொக்கு இந்த அளவிற்கு மக்களிடையே வெற்றிநடை போட்டுவருவதற்கு அதன் உரிமையாளர் 34 வயது, நிஷாந்தினி லோகநாதனையே சேரும்.
குடும்பத்திற்காக சளிக்காமல் இரவும் பகலும் உழைக்கும் தன் கணவருக்கு உதவும் பொருட்டு வீட்டிலேயே இருந்து ஏதாவது ஓன்லைன் வணீகம் செய்வதற்கு யோசித்தார். சமையல் கலையில் திறமை வாய்ந்த நிஷாந்தினி சிறுவயதில் தன் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்ட தொக்கினையே ஒரு வியாபாரமாக செய்ய முடிவெடுத்தார்.
2021 ஆம் ஆண்டு தொடங்கிய இவரின் சமையல் பயணம் செய்த ஒரு டிக் டோக் லைவ் காணொலியில் தம் வாழ்க்கையையே அன்று புரட்டி போட்டது. தம்முடைய லைவ்வில் ஒரு மில்லியன் கணக்கான பார்வையாளர்களும் 500 பேருக்கு மேல் அந்த காணொலி பகிரப்பட்டதும் நிஷாஸ் தொக்கை மென்மேலும் உயர வைத்ததாகும் என்றார்.
தொடக்கத்தில் மீன் தொக்கை மட்டும் செய்து மாதம் 1000 வெள்ளி கிடைத்தால் போதும் என்று நினைத்த நிஷா, தொக்கின் சுவையால் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க இன்று தமக்கு கீழ் 200 முதல் 300 பேர் வரை வைத்து வேலை செய்கிறார். வாடிக்கையாளர்களின் வயிறும் மனமும் நிறைவதற்கு அவர்களுக்கு ஏற்றது போல தொக்குகளை செய்ய தொடங்கினார். மீன் தொக்கு, கோழி தொக்கு, புதினா தொக்கு, புளிச்சிக்கீரை தொக்கு, என்று வித விதமான தொக்குகளை சைவத்திலும் அசைவத்திலும் செய்து நியாயமான விலையில் வியாபாரம் செய்து வருகிறார்.
மக்களின் சிறந்த ஆதரவினால் புதியதாக நிஷாஸ் ஃப்லேவர் இட்லியை அறிமுகம் செய்துள்ளார். சாக்லெட், பண்டான், ஸ்ரோபெரி அதனோடு சிப்ஸையும் சேர்த்து சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் வகையில் இதனை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.
தாம் அன்றாடம் செய்யும் தொக்கினை சோறு, ரொட்டி, இட்லி, தோசை இதனோடு சேர்த்து சாப்பிட்டு அதன் ருசியினை மக்களிடையே டிக் டோக்கில் பதிவேற்றம் செய்வார். டிக் டோக் லைவ் செய்யும் போது தொக்கு செய்யும் வழிமுறைகள், பேக்கிங் நடவடிக்கைகள், வாடிக்கையாளர் தரும் பின்னூட்டங்களை டிக் டோக்கில் பதிவேற்றம் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு மேலும் தொக்கின் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது. மலேசியாவிற்கு மட்டுமில்லாமல் நிஷாஸ் தொக்குச் சிங்கப்பூர், வெளியூருக்கும் சென்றடைகின்றன.
வாடிக்கையாளர்களோடு சேர்ந்து தம் கணவரும் தன்னுடைய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுவதாக நிஷா தெரிவித்தார். நிஷா தொக்கின் தொடர் ஒரு முயற்சியாக சி.ஓ.டி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி வரும் காலங்களில் அதனை கொடுக்க விருப்பதாக குறிப்பிட்டார். அதோடு, அனைத்து மளிகைக் கடைக்கும் நிஷாஸ் தொக்கு சென்றடையும் முயற்சியில் ஈடுப்படவுள்ளது என்பது தீபாவளியின் சிறப்பு செய்தியாகும். நிஷாஸ் தொக்கு வாடிக்கையாளர்களுக்கு நிஷாவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.