பினாங்கு, பிறை அருகில் கம்போங் மானிஸ் கிராமத்தை மறுமேம்பாடு செய்வதற்கு ஒரு கூட்டு முயற்சியாக ரயில் சொத்துடைமை வாரியமான பெர்பாடானன் அசேட் கெரேத்தாப்பி / பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்துடன் ஒரு கருத்திணக்க உடன்பாடு செய்து கொண்டுள்ளது.
இந்த கருத்திணக்க உடன்பாட்டில் பெர்பாடானன் அசேட் கெரேத்தாப்பிi வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அஸார் அஹ்மாட் மற்றும் பினாங்கு வீடமைப்பு வாரியத்தின் தலைமை நிர்வாகி அய்னுல் ஃபதில்லா சம்சுடின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வு பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிறை சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ எஸ். சுந்தரராஜு, போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ எம். ஜனசந்திரன் உட்பட இதர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.