அம்பாங்,ஜன.18
அம்பாங், பண்டார் பாருவில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து ப்ரோத்தோன் சாகா காரை திருடி சென்ற போதைப்பொருளுக்கு அடிமையான 29 வயதுடைய ஆடவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
28 வயதுடைய பாதிக்கப்பட்டவர் கடந்த திங்கட்கிழமை வீட்டின் கதவுகள் திறந்திருப்பதை கண்டுள்ளார்.
வீட்டினுள் முக்கியமான ஆவணங்கள், பணம், ப்ரோத்தோன் சாகா காரின் சாவிகள் இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி காவல்துறையிடம் புகார் அளித்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
சந்தேகிக்கும் நபர் மீது 15 குற்றச்செயல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் அவ்வாடவன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முஹமாட் அசாம் கூறினார்.