நாட்டில் ‘பரிகார சட்டம்’ பரிசீலிக்க திட்டம்

பெத்தாலிங் ஜெயா,ஜன.18
குறிப்பிட்ட காலத்திற்குள் வாகனங்களின் தரம் மற்றும் செயல்திறனை பூர்த்தி செய்து பெற்று கொள்ள தவறும் வாடிக்கையாளர்களுக்கு பரிகார சட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மறு ஆய்வு செய்வதில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முஹமாட் அலி தெரிவித்தார்.

குறைப்பாடுகள் கொண்டிருக்கும் வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதால் விளைவு ஏற்படுவதுடன் வாங்குபவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வதற்கு மலேசியாவிற்கு கடமை இருப்பதாகவும் அர்மிசான் முஹமாட்கூறினார்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த 8 மணி நேரத்திற்குள் வாங்கி பழுதடைந்த நாககன்னியின் பெரோடுவா பேசா வாகனம் மற்றும் திரெங்கானுவில் நொரியா மாமாட் என்பவர் புதியதாக வாங்கிய Honda HR-V காரை நான்கு மாதம் வரை பழுதுபார்க்காமல் வைத்திருந்த சம்பவங்கள் அடிப்படையில் இத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட கால அவகாசத்திற்குள் பூர்த்தி செய்ய தவறிய பழுதடைந்த வாகனங்களை வாங்குபவர்களுக்கு பரிகார சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பினாங்கில் உள்ள வாடிக்கையாளர் சங்கத்தின் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் அர்மிசான் முஹமாட் இவ்வாறு குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS