குவா முசாங்,ஜன.18
குவா முசாங், பத்து 6 கிராமத்திலிருந்து வெளியேறும் முக்கிய வழியாக உள்ள இரும்பு பாலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனத்த மழையினால் வெள்ளம் ஏற்பட்டு 60 மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கிராமத்திலிருந்து வெளியே வருவதற்கு ஒரு பாலம் மட்டுமே இருப்பதாகவும் வெள்ளத்தில் அப்பாலம் மூழ்கியதால் இரண்டு நாட்கள் மாணவர்களினால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்று குடியிருப்புவாசிகள் வருத்தம் தெரிவித்தனர்.
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கினால் மூழ்கும் பாலத்தின் நிலை மாணவர்களை மட்டும் பாதிக்காமல் வேலைக்கு செல்கின்றவர்களையும் பாதிக்கின்றது. இதனால் போதுமான வருமான இல்லாததால் பொருளாதாரம் பாதிப்படைகிறது என்று 19 வயதுடைய Muhammad Alif Nazuwaan Azian கூறினார்.
அக்கிராமத்தில் விரைவில் புதியதொரு பாலம் கட்டி தருவதற்கு நெங்கிரிமாநில சட்டமன்ற உறுப்பினர் முஹமாட் அசிசி அபு நாய்ம் ஒப்புக் கொண்டதை அடுத்து இதுவரையில் எந்த ஏற்பாடுகளும் தொடங்கவில்லை என்றும் விரைவில் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.