இந்தியா, ஏப்ரல் 08-
விராட் கோலியின் ஹேர்ஸ்டைலுக்கு எவ்வளவு கட்டணம் என்பது குறித்து அவரது ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆலீம் ஹக்கீம் கூறியுள்ளார்.
கிரிக்கெட் பிரபலங்களாக இருந்தாலும் சரி, சினிமா பிரபலங்களாக இருந்தாலும் சரி எப்போதுமே தங்களது ஹேர்ஸ்டைலில் கவனமாக இருப்பார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் விராட் கோலி, எம்.எஸ்.தோனி தான்.
தோனி எப்போதும் தனது ஹேர்ஸ்டைலை வித விதமாக மாற்றி வருகிறார். இதே போன்று தான் மிகவும் ஸ்டைலான கிரிக்கெட் வீரரான கோலியும் ஹேர்ஸ்டைலை அடிக்கடி மாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தான் விராட் கோலியின் தற்போது ஹேர்ஸ்டைல் மற்றும் தாடி ஸ்டைல் பேசு பொருளாக மாறியிருக்கிறது. பிரபல சிகை அலங்கார நிபுணரான ஆலீம் ஹக்கீம் விராட் கோலியின் ஹேர்ஸ்டைல் மாற்றுவதற்கு எவ்வளவு செலவு என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
பாலிவுட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கலின் ஹேர்ஸ்டைல் அலங்காரங்களில் தனித்துவமான திறமைக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் Brut India உடன் நடந்த நேர்காணலின் போது ஹேர்கட்டிற்கு எவ்வளவு கட்டணம் என விவாதிக்கப்பட்டது.
அப்போது விராட் கோலிக்கு ஹேர்ஸ்லை செய்வதற்கு எவ்வளவு கட்டணம் என்று வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் தோராயமாக கூறியுள்ளார். மேலும், விராட் கோலி உடனான நட்பு, எப்போதும் புதுவிதமான ஹேர்ஸ்டைலை பரிசோதிக்க விருப்பக் கூடிய அவரது குணம் ஆகியவற்றையும் பகிர்ந்து கொண்டார்.
எனது பீஸ் மிகவும் எளிமையானது தான். நான் எவ்வளவு வசூலிக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். இது ரூ.1 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இதுதான் குறைந்தபட்சம் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் வரவிருப்பதால், நாங்கள் வித்தியாசமாக செய்ய முடிவு செய்தோம். விராட் கோலி எப்போதும் இதை முயற்சி செய்ய வேண்டும், அடுத்த முறை முயற்சி செய்வோம் என்று பலவிதமான பிளான் வைத்திருப்பார். ஐபிஎல் என்பதால், அவரது புருவங்களில் ஒரு மாற்றம் செய்து, சைடு முழுவதும் கொஞ்சம் ஃபேடாக வைத்தோம். மேலும், புருவத்தில் ஒரு கோடு இருப்பது போன்று செய்தோம்.
மேலும், ஷைடு பக்கம் முழுவதும் டிரிம்மாக இருப்பது போன்று வைத்தோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட போது அதிகளவில் லைக்ஸ் மற்றும் ஷேர் செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். இந்த சீசனில் விராட் கோலி புதுவிதமான ஹேர்ஸ்டைலுடன் களமிறங்கி விளையாடி வருகிறார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.