இந்தியா, ஏப்ரல் 08-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 20ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் டெல்லி அணி ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
கடைசியில் வந்த ரொமாரியா ஷெப்பர்ட், ஆன்ரிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 4, 6, 6, 6, 4, 6 என்று மொத்தமாக 32 ரன்கள் குவித்தார். இதுதான் மும்பைக்கு வெற்றி தரப்போகிறது என்பது அப்போது தெரியாது.
டெல்லி வீரர் ஆன்ரிச் நோர்ட்ஜே 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்து 65 ரன்கள் கொடுத்துள்ளார். இஷாந்த் சர்மா 3 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்தார். ஜே ரிச்சர்ட்சன் 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்தார். அக்ஷர் படேல் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்து 35 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் போரெல் 41 ரன்களில் நடையை கட்டினார். பிரித்வி ஷா 66 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
ஆனால், பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸ் உள்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 29 ரன்களில் தோல்வியை தழுவியது. தோல்விக்கு பிறகு பேசிய டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியிருப்பதாவது: பவர்பிளேயில் எங்களிடம் போதுமான ரன்கள் இல்லை.
ஆனால், அடுத்த சில ஓவர்கள் நன்றாகவே பேட்டிங் செய்தோம். ஆனால், ஓவர்களுக்கு 15 ரன்கள் வீதம் அடிப்பது சாத்தியமல்ல. பவுலர்கள் விக்கெட்டுக்குள் பந்து வீச வேண்டும், தேவைப்படும் போது மெதுவாகவும், வேகமாகவும் என்று மாறி மாறி பந்து வீச வேண்டும்.
அதன்படி தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான லிசாட் வில்லியம்ஸை மாற்று வீரராக அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்று விளையாடி வரும் லிசாட் 2 டெஸ்ட், 4 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 11 டி20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார். தற்போது ரூ.50 லட்சத்திற்கு அடிப்படை விலைக்கு அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.