கிரிக்கெட் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்ட ரவீந்திர ஜடேஜா

இந்தியா, ஏப்ரல் 09-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவிற்கு கிரிக்கெட் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டுள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி நேற்று சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்தனர். இதில் துபே 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டேரில் மிட்செல் 25 ரன்களில் நடையை கட்டினார். கடைசி வரை பொறுமையாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு கேப்டனாக முதல் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இறுதியாக கெய்க்வாட் 58 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி ஒரு ரன் எடுத்தார்.

கடைசியாக சிஎஸ்கே 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றியோடு புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், தான் இந்தப் போட்டிக்கு விருது கொடுக்கும் நிகழ்வு நடந்தது. கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அப்போது பேசிய அவர், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 1000 ரன்களுக்கு மேல் எடுத்ததோடு, 100க்கும் அதிகமாக விக்கெட் கைப்பற்றியதோடு, 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் என்று குறிப்பிட்டார். ஆனால், உண்மையில் எனக்கு அதைப் பற்றி தெரியாது என்று ஜடேஜா கூறினார்.

இந்த இடம் சென்னை ஒவ்வொருவருக்கும் ஒரு டைட்டில் இருக்கும். எம்.எஸ்.தோனிக்கு தல என்றும், சுரேஷ் ரெய்னாவிற்கு சின்ன தல என்றும் இருக்கும். இப்போது, இது உங்களுக்கு டைட்டில் கொடுப்பதற்கான நேரம். அது தான் கிரிக்கெட் தளபதி என்றார். அது இப்போது பரிசோதனையில் இருக்கிறது.

WATCH OUR LATEST NEWS