சிஎஸ்கே அணிக்காக 250ஆவது போட்டியில் விளையாடும் தோனி

இந்தியா, ஏப்ரல் 15-

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் 29ஆவது லீக் போட்டியின் மூலமாக சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ்.தோனி இன்று தனது 250 ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார். தோனியின் 250ஆவது போட்டி காரணமாக சிஎஸ்கே எக்ஸ் பக்கத்தில் தோனியின் பல விதமான பேட்டிங் தோற்றத்தை வைத்து சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதில், இடையில் 2 ஆண்டுகள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2016 மற்றும் 2017 என்று 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த 2 ஆண்டுகள் தோனி ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணியில் இடம் பெற்று விளையாடினார்.

இதையடுத்து மீண்டும் சிஎஸ்கே 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெற்றது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் டிராபியை தட்டிச் சென்றது.

சிஎஸ்கே அணிக்காக தோனி 212 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையிலான சிஎஸ்கே 128 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 82 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, 2 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியின் மூலமாக சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ்.தோனி இன்று தனது 250 ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார். இந்தப் போட்டியில் அவர் பேட்டிங் செய்து 4 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே அணிக்காக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும், சிஎஸ்கே அணிக்காக 23 அரைசதங்கள் அடித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்காக 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, 5529 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் 4 ரன்கள் எடுப்பதன் மூலமாக தோனி ஒரு சாதனையை படைக்க இருக்கிறார்.

அதாவது, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை விளையாடிய என்ற பெருமையை பெற்றுள்ள தோனி 4ஆவது இந்திய வீரராக தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்காக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

WATCH OUR LATEST NEWS