இந்தியா, மே 04-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 51ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இது ரோகித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, ஹர்திக் பாண்டியா குறித்து விமர்சனம் செய்தனர்.

இது ஒரு புறம் இருந்தாலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் அணியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. ஆனால், அந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போன்று அடுத்தடுத்து நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் தோல்வியை தழுவி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.
அப்படி 12 புள்ளிகள் பெற்றாலும் கூட மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பிற்கு செல்ல முடியாது. ஆனால், எஞ்சிய 3 போட்டிகள் முறையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இதில், 3 போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவு தான். எது எப்படியிருந்தாலும், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.
இன்னும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கேப்டன் சுமை காரணமாக ரோகித் சர்மா பேட்டிங் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இப்பொழுது ஹர்திக் பாண்டியா கேப்டனாக பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை. முதல் முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.