வருகின்ற மே 27 எஸ்.பி.எம் சோதனை முடிவுகள் வெளியாகவுள்ளது

கோலாலம்பூர், மே 09-

மலேசிய கல்வி சான்றிதழ் எனப்படும் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 27 ஆம் தேதி வெளியிடப்படயிருப்பதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் சோதனை எழுதிய மாணவர்கள், காலை 10 மணி தொடங்கி தங்களின் பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தனியாக எஸ்.பி.எம் சோதனையை மேற்கொண்டவர்கள், அவர்களின் தேர்வு முடிவுகள் தபால் மூலம் அனுப்பப்படும் அல்லது தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த மாநிலக் கல்வித்துறையை தொடர்புக் கொள்ளலாம் என்று அது கூறியுள்ளது.

மேலும், மே 27 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6 மணி வரையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் myresultspm.moe.gov.my என்ற இணையத்தளத்தின் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS