குவந்தான், ஜாலான் வோங் ஆ ஜங் என்ற இடத்தில் தங்களை போலீஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு அந்நியச் செலவாணி முதலீட்டு போதனையாளரை மடக்கி கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், கடந்த வாரம் வியாழக்கிழமை இது குறித்து போலீசில் புகார் செய்து இருப்பதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் 395 பிரிவின் கீழ் விசாரணை செய்து வரும் போலீசார், இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் அளித்து உதவுமாறு பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.