ஜோகூர்,இஸ்கந்தர் புத்ரி -யில் உள்ள ரொட்டி தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் அலுமினியம் உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 52 அந்நிய நாட்டவர்களும், உள்ளூர் பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளர்.
நேற்று காலை 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் 76 அந்நியப் பிரஜைகள் மற்றும் உள்ளூர் பிரஜைகளிடம் சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறையின் இடைக்கால இயக்குநர் முகமது பைசல் ஷம்சுதீன் தெரிவித்தார்.
வேலை பெர்மிட்யின்றி வேலை செய்ததற்காக 52 அந்நியப் பிரஜைகளும், அவர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக இரண்டு உள்ளூர் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.