வெற்று வாக்குறுதிகள் தேவையில்லை

சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளுக்கு உண்மையான தீர்வு தேவையே தவிர வெற்று வாக்குறுதிகளும், வாய் சவடால்களும் அல்ல என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ தெரிவித்துள்ளார்.

கோலகுபு பாருவில் இந்திய சமுதாயத்தினர் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கண்டறிவதற்கு அவர்களுடன் சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடீன் ஷாரி ஒரு சந்திப்பை நடத்துவதற்கு தாம் முன்வைத்துள்ள பரிந்துரையை தவறாக வியக்கியாணம் செய்து இருக்கும் மந்திரி பெசாரின் உதவியாளர் ஜெய் ஜே டென்னிஸை, சார்லஸ் சாண்டியாகோ இன்று கடுமையாக சாடினார்.

தம்மைப் பொறுத்தவரையில் தெளிவற்ற வார்த்தைகளால் ஒரு சிக்கலை மறைப்பது ஒருவருக்கு எளிதானதாகும். ஆனால், எழுப்பட்ட பிரச்னையை ஆராய்வதற்கான உறுதி மொழி வழங்குவது எளிதானதாகும் என்று சார்லஸ் சாண்டியாகோ குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகள் பல தசாப்தங்களாக புரயோடிக் கொண்டு இருக்கின்றன. இதற்கு உண்மையான தீர்வு என்ன என்பதை மனம் திறந்து பதில் சொல்ல வேண்டுமே தவிர வாய் சவடால்கள் கூடாது என்று மந்திரி பெசாரின் உதவியாளருக்கு சார்லஸ் சாண்டியாகோ நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS