கோத்தா திங்கி, மே 10-
ஜோகூர், கோத்தா திங்கி-யில், கியா ரியோ ரக வாகனத்துடனான சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியான 14 வயது பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி 6.50 அளவில், ஜாலான் பண்டார் பேனாவார்-புங்காய் சாலையில் அந்த விபத்து நிகழ்ந்தது.
இடைநிலைப்பள்ளி மாணவரான அவர் செலுத்திய யமஹா ஈகோ சோலாரிஸ் ரக மோட்டார்சைக்கிள், 22 வயது இளம் பெண் செலுத்திய கியா ரியோ ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக, கோத்தா திங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சுப்பரின்டென்டான் ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அம்மாணவர் உயிரிழந்த நிலையில், சடலம் உடற்கூறு ஆய்வுக்காககோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேவேளை, அம்மாணவருடன் பயணித்திருந்த அவரது நண்பருக்கு இடது கை முறிந்த வேளை, அதே மருத்துவமனையில் அவர் சிகிச்சையைப் பெற்று வரூவதாக ஹுசின் ஜமோரா கூறினார்.