கோலாலம்பூர், மே 10-
4 ஆண்டுகள் தேர்தல் ஆணையத்தை வழி நடத்திவந்த டான் ஸ்ரீ அப்துல் கானி சாலே, நேற்று தொடங்கி கட்டாய பணி ஓய்வை பெற்றார்.
நாளை நடைபெறவுள்ள சிலாங்கூர், கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலே, அவர் தலைமையில் நடைபெறவிருக்கும் இறுதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, தேர்தல் ஆணையத்தின் தலைவராக திறம்பட செயலாற்றி வந்த கானி சாலே, கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில், தேர்தல் ஆணையத்தை தாம் வழிநடத்திய அனுபவங்களை என்றென்றும் மறுக்க முடியாது என கூறியுள்ளார்.